இனிய வணக்கங்கள்!
சமீபத்தில் நண்பர் ஒருவரிடம் உரையாடிக் கொண்டிருந்தேன். நான் கூர்ந்து கவனித்ததில் அவர் வேற்று மொழி கலப்பு எதுவும் இன்றி எளிய முறையில் தமிழில் பேசியது புலப்பட்டது. எத்தனை முயற்ச்சித்தாலும் தப்ப இயலாத ஒன்று ஆங்கில கலப்படம். அவர் முடிந்த வரை ஆங்கில கலப்பு இல்லாத வகையில் தன் வரிகளை பேசியது வியக்க வைத்தது.
இணையதளத்தில் நாம் பெரும்பாலும் ஆங்கில சொற்களையே பயன்படுத்துகிறோம். ஓர் எடுத்துகாட்டு - "Browser - ல web-site address அடிச்சா, home page வரும். அதுல documents link click பண்ணா ஒரு list காட்டும். கீழ download link button ல click பண்ணு".
நம் மொழி எவ்வளவுக்கு எவ்வளவு பழமையானதோ, அவ்வளவுக்கு அவ்வளவு புதுமையானதும் கூட. "லத்தின்" மற்றும் பிற தொன் மொழிகளைப்போல் இல்லாது நம் மொழி காலத்தின் மாற்றத்திற்கேற்ப வளர்ந்து கொண்டே போகின்றது. இதில் இன்னுமொரு சிறப்பும் உண்டு. ஆங்கிலம் போன்ற மொழிகள் வளர்ச்சி என்கிற பெயரில் பிற மொழி சொற்களை தங்கள் மொழியில் பயன் படுத்துகிறார்கள். எடுத்துக்காட்டாக - "guru", "mantra" என்ற இந்திய அல்லது வடமொழி சொற்கள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. தமிழர்கள் என்னதான் பேசும்பொழுது ஆங்கிலம் கலந்தாலும், நவீன ஆங்கில சொற்களுக்கான நிகர் சொற்கள் தமிழில் உண்டு. குறிப்பாக நிகழ்கால தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சொற்கள்.
ஒரு சின்ன பட்டியல் இதோ!
1. Computer - கணிப்பொறி
2. Software - மென்பொருள்
3. Internet - இணையம் (அ) இணையத்தளம்
4. communication - தொடர்பு
5. Information Technology - தகவல் தொழில்நுட்பம்.
6. Link - இணைப்பு
7. Hyperlink - மீத்தொடுப்பு (அ) மிகை
8. Click - சொடுக்கு
9. Double-click - இரட்டை சொடுக்கு
10. Web Browser - இனைய உலாவி (அ) வலை உலாவி
11. Document - ஆவணம்
12. Download - இறக்குமதி
13. Mobile phone - கைபேசி (அ) நகர்பேசி (அ) அலைபேசி
14. Google Application Center - கூகுள் செயலி மையம்
15. Database - தரவுத்தளம்
16. Font - எழுத்துரு
17. Thesarus - நிகண்டுகள்
18. Disclaimer - பொறுப்பு அறிக்கை
19. FAQ - ஐயமும் தீர்வும்
20. CD - குறுந்தகடு
21. Disable - முடக்கு
22. User Id - பயனர் இத்து
23. Password - கடவுச்சொல்
24. Input tools - உள்ளீட்டு கருவிகள்.
25. Cloud Computing tools - மேகக் கணிப்புக் கருவிகள்
இன்னும் போய்க்கொண்டே இருக்கலாம். இன்னும் வேண்டுமென்றால், இந்த இணைப்பிற்கு செல்லுங்கள்.
http://tamildictionary.50webs.com/
இதிலிருந்து புலப்படுவது என்னவென்றால் நவீன ஆங்கில சொற்களுக்கு நிகர் சொற்கள் நம் மொழியில் உள்ளன. ஆனால் நாம் பயன்படுத்துவதே இல்லை என்பதே பெருங்குறை.
இன்னொரு செய்தி! சில வலைத்தளங்கள் கூட தங்களது பெயர்களை தமிழில் மொழிபெயர்கிறார்கள். உதாரணமாக - Facebook: முகநூல்.
எனவே நண்பர்களே! நம் உரையாடல்கள், எழுத்துக்கள் எல்லாம் முடிந்த வரை தமிழிலேயே இருக்கட்டும். முயர்ச்சிப்போமே - சரிதானே?
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!!
தமிழ்கூறும் நல்லுலகம் வாழ்க, வாழ்க!!!

No comments:
Post a Comment